இரத்த தானம் செய்வோம்! இன்னுயிர் காப்போம்!

மனிதனுக்கு உயிர் இரத்தம் தான். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர்கள் ஒரே நேரத்தில் 200,300 மி.லி இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு நாம் கொடுக்கும் இரத்தம் இரண்டு வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே உற்பத்தியாகிவிடும்.
நாம் தானமாக கொடுக்கிற இரத்தம், அறுவை சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு இரத்த இழப்பு ஏற்பட்டால், அதனை ஈடு செய்வதற்கு நாம் தானமாக கொடுக்கிற இரத்தம் பயன்படுகிறது.
சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகினறனர். வேறு சிலர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் இரத்த தானம் செய்து வருகின்றனர். நம்மால் இயன்ற வரை இரத்த தானம் செய்வோம். இரத்த குறைபாடால், ஏற்படும் உயிரிழப்பை தவிர்ப்போம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.