முடங்குகிறதா தமிழகம் !தாகத்தில் தமிழகம் !தண்ணீரை தேடி அலையும் மக்கள்

முடங்குகிறதா தமிழகம் !தாகத்தில் தமிழகம் !தண்ணீரை தேடி அலையும் மக்கள்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு என்ற வள்ளுவனின் குறல் தமிழர்கள்  அனைவரும் அறிந்த ஒன்றே.அந்த வகையில் நீர் என்பது மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காரணி ஆகும்.நம் முன்னோர்கள் கூட அந்த காலத்தில் கூறுவார்கள்,உணவு இல்லாமல் கூட நாம் ஒரு சில தினங்கள் வாழ முடியும்,ஆனால்  தண்ணீர் மட்டும் இல்லை என்றால் மனிதன் ஒரு நாள் உயிர் கூட வாழ முடியாது என்று..
அந்த வகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் வறட்சி நிலவி வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மழைக்காலங்களில் மழைநீரை சேமித்து வைக்காததுதான்.ஆம் அதுவும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.மேலும் தமிழகத்தை வெளுத்து வாங்கிய அக்னி நட்சத்திரமும் ஒரு காரணம் ஆகும்.
இந்த வகையில் தென் மாவட்டங்களை காட்டிலும்  வட மாவட்டங்கள் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் முக்கிய நீர் நிலைகளும் வறண்டு காணப்படுகிறது.இதன்விளைவாக ஓட்டல்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது.
அன்றாட குடிநீருக்கு தண்ணீர் லாரிகளையே நம்பியுள்ளனர்  மக்கள்.ஆனால் தற்போது அந்த லாரிகளுக்கே தண்ணீர் நிரப்ப தண்ணீர் இல்லை.  உணவை சமைக்க கூட போதிய தண்ணீர் இல்லை என்று புலம்புகிறார்கள் சென்னையில் ஹோட்டல் வைத்துள்ளவர்கள்.இதனால் வாடிக்கையாளர்களிடம் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றது.ஒரு சிலர் தங்களது உணவகங்களை முடியும் வருகின்றனர்.

அதற்கு ஒரு படி மேலே ஐ.டி.நிறுவனங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவுரை வழங்கியுள்ளது.தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தலைநகர் சென்னையில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன.
மேலும் கால்நடைகளை வைத்துள்ளவர்களும் இதற்கு தப்ப வில்லை.தங்களது கால்நடைகளுக்கு உணவிற்கு பின் தண்ணீர் வைக்க சிரமப்பட்டு வருகின்றனர்.பல ஊர்களில் தண்ணீருக்காக பல மணிநேரங்கள் காத்திருந்தும் ,பல கிலோமீட்டர் தூரங்கள் நடந்து சென்று வாங்கி வருகின்றனர்.

Join our channel google news Youtube