அமெரிக்காவில் டிக் டாக்குக்கான இறுதி கெடுவை நீடிக்க மறுக்கும் டொனால்டு டிரம்ப்!

அமெரிக்காவில் டிக் டாக்குக்கான இறுதி கெடுவை நீடிக்க மறுக்கும் டொனால்டு டிரம்ப்.

வீடியோக்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கூடிய சமூக வலைதளமான டிக் டாக் செயலி அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பதற்கான இறுதி கெடு தேதியான செப்டம்பர் 15ஐ நீட்டிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அமெரிக்காவுக்கு விற்க வேண்டும் அல்லது மூடி விட வேண்டும் என அமெரிக்க அதிபர்  திட்டவட்டமாக சொல்லியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து டிரம்ப் பேசுகையில், இறுதி கெடுவை நீட்டிக்க போவதில்லை செப்டம்பர் 15 தான் இறுதி கெ.டு என்ன நடக்கிறது என்று பார்ப்போம், ஒன்று செயலியை விற்க்க வேண்டும் இல்லையேல் மூட வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக டிக் டாக் செயலியை மூட போகிறோமா? அல்லது அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க போகிறார்களா என்பதை பார்ப்போம் என கூறியுள்ளார்.

author avatar
Rebekal