கொரோனாவால் மரணிக்கும் மருத்துவர்கள்! உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்!

ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் செவிலியர் அர்ச்சனா, கொரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மக்களை பாதுகாக்கும் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மக்களுக்காக அர்பணிப்புணர்வுடன் பணி செய்யும் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் வேளையில், அவர்களை புதைப்பதற்கு கூட எதிர்ப்பு தெரிவிக்கும் மனிதாபிமானமற்ற செயல் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் செவிலியர் அர்ச்சனா, கொரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து, நவல்பூர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், உடலை புதைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பொதுமக்களிடம் அதிகாரிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக  பேச்சுவார்த்தை நடத்தி, அதன் பின் உடலை அடக்கம்  செய்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.