தனிநபரின் சௌகரியத்திற்காக சட்டத்தை மாற்ற முடியாது – கமல்!

kamal hasan 11

பிக் பாஸ் வீட்டில் தனிநபர் ஒருவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக விதிமுறைகளை மாற்ற முடியாது என கமல் அர்ச்சனாவிடம் கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த அர்ச்சனா வெளியில் இருக்கும் பொழுது நல்ல பெயருடன் தொகுப்பாளினியாக வலம் வந்தார். வீட்டிற்குள் வந்த பின்பும் பலருக்கு அச்சுமா என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக அர்ச்சனாவின் நடவடிக்கைகள் ரசிகர்களை கோபம் அடைய செய்யும் வகையில் உள்ளது. இதற்காக கமல் அவர்களும் அவ்வப்போது தக்க பதிலடியை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் போட்டியாளர்களை நேரலையில் சந்தித்துப் பேசிய கமல், ரம்யா மற்றும் ஆரி அவர்களின் மனக்கமுறல்களை கேட்டு அறிந்தார். அதன்பின் அர்ச்சனாவிடம் ஒவ்வொருவரின் சௌகரியத்திற்காக எல்லாம் விளையாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது என காரசாரமாக கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

அர்ச்சனாவுக்கு குருநாதர் கொடுத்த பல்பு – வாயடைத்த அர்ச்சனா!

biggboss

கடந்த வாரம் அர்ச்சனாவின் சில செயல்பாடுகள் ரசிகர்களையே கோபமடையச் செய்த நிலையில், இன்று போட்டியாளர்களை சந்தித்துப் பேசிய கமல் அர்ச்சனாவின் தவறுகளை சுட்டிக் காட்டிப் பேசுகிறார்.

75 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் ஒரு மாதத்தில் முடிவடைய உள்ளது. 10 போட்டியாளர்கள் தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். இந்த வார இறுதியில் உள்ளே இருப்பவர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார். இந்நிலையில் கடந்த வாரம் அர்ச்சனாவின் சில செயல்பாடுகள் ரசிகர்களையே கோபமடைய செய்யும் வகையில் இருந்தது.

இன்று போட்டியாளர்களை கமல் வழக்கம் போல நேரலையில் சந்தித்து பேசுகையில், அர்ச்சனாவின் செயல்கள் சரியானது தானா என அவர் செய்த ஒவ்வொன்றையும் கமல் அவர்கள் எடுத்துக் கூறுகிறார். அதற்கு பதில் கூற அர்ச்சனா வந்தாலும், கமல் அர்ச்சனாவின் தவறை சுட்டிக்காட்டி வாயை அடைத்து விடுகிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

பிக் பாஸ் வீட்டுக்குள் தலைவர் போட்டி – ஜெயிக்க போவது யார்?

Promo 1

இன்று பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான தலைவரை வித்தியாசமான போட்டி மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள், இதில் ரம்யா, அர்ச்சனா மற்றும் பாலா ஆகிய மூவர் போட்டியிடுகிறார்கள். 

இன்றுடன் 75 நாட்களாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், விறுவிறுப்பான இறுதிக்கட்டம் நெருங்கிக்கொண்டிருந்தது. தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரி, ரம்யா, பாலாஜி, அஜீத், ஷிவானி, அர்ச்சனா, ரியோ, அனிதா மற்றும் சோம் ஆகிய ஒன்பது பேர் மட்டுமே மீதமுள்ளனர். இவர்களில் இந்த வாரம் யாராவது ஒருவர் வெளியேற்றப்படுவார்கள்.

இந்நிலையில், இன்று இந்த வாரத்திற்கான தலைவரை வித்தியாசமான முறையில் தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெறுகிறது. ராம்யா, பாலா, அர்ச்சனா ஆகிய மூவரும் தான் இந்த வாரத்திற்கான தலைவர்களாக போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ராம்யா தான் ஜெயித்திருப்பார் போல, அர்ச்சனா கடைசியாக கோபத்துடன் தூக்கியெறிந்து செல்கிறார். ரம்யாவை தான் அனைவரும் கட்டியணைக்கிறார்கள். ஆகவே இந்த வாரம் ரம்யா தான் வீட்டின் தலைவர் போல. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

நிஷா பயன்படுத்திய யுக்தி நியாயமாகப்பட்டதா? அர்ச்சனாவிடம் கமல் கேள்வி .!

bigg boss season 4

புதிய மனிதா டாஸ்க்கில் அர்ச்சனாவை அழ வைக்க தந்தையின் பெயரை எடுத்த நிஷாவின் யுக்தி நியாயமாகப்பட்டதா என்று கமல் கேள்வி கேட்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானதது 69நாட்களாக ஒளிப்பரப்பப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்று சனிக்கிழமை என்பதால் கமல் நேரலையில் தோன்றி பல பிரச்சனைகளுக்கு தீர்வை கூறுவதுடன்,பலரை வச்சு செய்வதும் வழக்கம் .அதனுடன் இன்று இரண்டு பேர் வெளியாக உள்ளதாகவும் கமல்ஹாசன் பர்ஸ்ட் புரோமோவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில், புதிய மனிதா டாஸ்க்கில் அர்ச்சனாவின் தந்தையை குறித்து நிஷா பேசிய விவகாரம் குறித்து கேட்கிறார். கமல்ஹாசன் அர்ச்சனாவிடம் நிஷா பயன்படுத்திய யுக்தி நியாயமாகப்பட்டதா என்று கேள்வி கேட்க ,இல்லை என்னால் அந்த சூழலை கையாள முடியவில்லை என்று கண்ணீருடன் கூறுகிறார்.

மேலும் நீர், நெருப்பு என்பதையும் தாண்டி நான் எதிர்பார்க்காத நிஷாவை பார்த்ததாக கமல் கூற எந்த இடத்திலையும் நான் தவறாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை என்று நிஷா கூறுகிறார்.அதற்கு கமல் நீங்கள் பயன்படுத்தி விட்டீர்களே என்று கூற இல்லை சார் நான் பண்ணது தவறு இல்லை என்று எந்த இடத்திலையும் கூறவில்லை என்று நிஷா கூறுகிறார்.அதற்கு அது பார்க்கிறவங்களுக்கு தெரிய வில்லை.யோசிக்காமல் உங்களால் செய்ய முடியுமா என்று கேள்வி கேட்பதுடன் புரோமோ முடிவடைகிறது.இதோ அந்த வீடியோ

 

நீங்களே இவ்வளவு சீரியஸ் ஆகுற அளவுக்கு நிஷா பேசியிருக்காங்க .! அர்ச்சனாவிடம் வாதிடும் அனிதா .!

anitha

புதிய மனிதா டாஸ்க்கில் நிஷா அர்ச்சனாவின் தந்தை குறித்து பேசி அவர் அழுததால் தான் சுவாரஸ்யம் குறைந்ததாக அனிதா கூறுகிறார்.

நேற்றைய தினம் புதிய மனிதா டாஸ்க்கிலும் ,வீட்டின் பிற செயல்களிலும் ஈடுபாடு குறைவாக விளையாடிய ஜித்தன் ரமேஷ் மற்றும் அனிதாவை ஓய்வு அறைக்கு அனுப்பியிருந்தார்கள் .இதற்கு அனிதா பல கேள்விகளை ஹவுஸ்மேட்களிடம் கேட்டார் . ஏற்கனவே வெளியான பர்ஸ்ட் புரோமோவில் ,நிஷா அவர்கள் அர்ச்சனாவின் தந்தையின் பெயரை இழுத்து அழ வைத்ததால் தான் அந்த டாஸ்க்கின் சுவாரசியம் குறைந்ததாகவும் ,அழ வைத்த நிஷா சிறப்பாக விளையாடியவர், வீட்டில் தனது கேப்டன் வேலையை சரியாக செய்த நான் சுவாரசியம் குறைவான போட்டியாளரா என்று அடுக்கடுக்காக பல கேள்விகளை ரியோவின் முன் வைத்திருந்தார் .

இந்த நிலையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில்,புதிய மனிதா டாஸ்க்கில் நிஷா தந்தையை குறித்து அர்ச்சனாவிடம் கேட்ட பின் ,பஸர் அடிப்பதற்கு முன்னுள்ள கடைசி பத்து நிமிடத்தில் தான் நான் உடைந்ததாக கூறிய அர்ச்சனா ,அந்த 10 நிமிடம் கூட டாஸ்க் தானே என்று அனிதா கூறுகிறார் . நீங்கள் அழுததால் தான் சுவாரஸ்யம் குறைந்ததாக கூறியதால் இதை கூறுவதாக அர்ச்சனா கூறுகிறார்.

அதற்கு அனிதா நீங்க அழுததால் என்று சொல்லவில்லை,நிஷா அந்த டாப்பிக்கை ஆரம்பித்ததால் தான் அந்த டாஸ்க் குலைந்ததாக கூற நான் அழுததாக கூறியதால் தான் இதை கூறியதாக அர்ச்சனா கூறி விட்டு அங்கிருந்து நகர நீங்களே இவ்வளவு சீரியஸ் ஆகுற அளவுக்கு நிஷா பேசியிருக்காங்க என்று அனிதா கூறுகிறார்.மொத்தத்தில் இன்றைய எபிசோட் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

நிஷாவை பழி வாங்கும் அர்ச்சனா – எல்லாமே நடிப்பு தான்!

archana

நேற்று அர்ச்சனாவை உணர்வு பூர்வமாக தூண்டுவதற்காக நிஷா அர்ச்சனாவின் தந்தையை இழுத்ததற்காக இன்று அர்ச்சனா நிஷாவை பழி வாங்குகிறார். 

கடந்த 60 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மனிதன் மற்றும் இயந்திரம் என போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இயந்திரமாக இருப்பவர்களிடம் உணர்ச்சிகளை தூண்ட வேண்டும் என்பதற்காக நேற்று அர்ச்சனாவின் தந்தையை குறித்து நிஷா பேசியதால் அர்ச்சனா மனமுடைந்தார்.

இந்நிலையில், இன்று நிஷா இயந்திரமாக உள்ளார். அப்பொழுது அர்ச்சனா நிஷாவிடம் நேற்று நீங்கள் செய்தது சரியா என கேட்கிறார். மேலும், எல்லாம் முழுக்க முழுக்க நடிப்பு எனவும் கூறியுள்ளார். நிஷாவால் செய்ய முடியாததை செய் எனவும் அர்ச்சனா கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

கேப்டன்சி டாஸ்க் : புதிய தலைவர் அறிவிப்பிற்கு முகம் சுருங்கி கைதட்டும் அர்ச்சனா.!

bigboss

பிக்பாஸ் வீட்டிலுள்ள அனைத்து போட்டியாளர்களும் இந்த வார தலைவர் போட்டிக்கு போட்டியிட இந்த வார தலைவராக அனிதா வெற்றி பெற்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 63 நாட்களை கடந்து 13 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.கடந்த வாரம் கேப்டனாக ஜித்தன் ரமேஷ் இருந்த நிலையில் இந்த வார தலைவருக்கான டாஸ்க்கானது தற்போது வெளியான பர்ஸ்ட் புரோமோவில் உள்ளது .

வழக்கமாக அந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் சிறப்பாக விளையாடியவர்களில் மூவர் தேர்வு செய்யப்பட்டு தலைவர் போட்டிக்கான டாஸ்க்கில் வெற்றி பெற்றவரே தலைவராக அறிவிக்கப்படுவார்.ஆனால் இந்த வாரம் தலைவர் போட்டிக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் போட்டியிட வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார்.

அதன்படி அனைவருக்கும் டாஸ்க் வழங்க , இறுதியில் டாஸ்க்கில் அனிதா வெற்றி பெற்று இந்த வார தலைவராக அறிவிக்கப்படுகிறார் .உடனே பாலாஜி உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் அர்ச்சனாவின் முகம் இந்த அறிவிப்பால் சுருங்குகிறது .மேலும் அனிதா இந்த வார தலைவராக இருப்பதால் நாமினேஷனில் இருந்து தப்பித்து அடுத்த வாரமும் அவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என்பது உறுதியாகிறது.

 

எவிக்சனில் இருந்து காப்பாற்றப்பட்ட நிஷா.! கண் கலங்கும் அர்ச்சனா.!

big boss

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எவிக்சனிலிருந்து நிஷா காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவிக்க அர்ச்சனா கண் கலக்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் எவிக்ட் ஆவது வழக்கம் .அந்த வகையில் இந்த வாரம் ஆரி, ஷிவானி,அனிதா , ஆஜீத்,ரம்யா,நிஷா மற்றும் சனம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் .இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது

நேற்றைய தினம் ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டனர் . இந்நிலையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் 60 நாட்களில் பிக்பாஸ் வீட்டில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கூற பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேள்விகள் கேட்க , அனைவரும் திணறியதும், பிக்பாஸிடமிருந்து அனைவரும் மொக்க வாங்கியதும் இந்த வாரம் பார்த்தோம் .அதனை குறித்த கேட்ட கமல் ,வெளியே சென்று கூற கூடாது என்ற ரகசியத்தை கடைசி வரை காப்பாற்றியதற்காக பாராட்டுகள் என்று நிஷா கேட்கிறார்.அப்போது நான் ரகசியம் ஒன்று கூறுகிறேன் என்று கூறிய நிஷா காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கிறார் .

இதனால் கண் கலங்கும் அர்ச்சனா நிஷாவை தொலைச்சிட்டோம் என்ற பயம் இருந்ததாக கூறினார்.அதற்கு கமல் நீங்களும் தொலைந்ததை தேடிட்டு இருந்தீர்களா ,நாங்களும் வெளியே இருந்து தேடுறோம் என்று கூறுகிறார்.

 

நகைச்சுவை நல்லா இல்லைன்னு சொல்லாதீங்க.!நிஷா குறித்து அர்ச்சனா , ஜித்தன் ரமேஷ்.!

bigboss

நிஷாவின் நகைச்சுவை நன்றாக இல்லை என்று சொல்லாதீர்கள்,அது அவரது கேரியரை பாதிக்கும் என்று அர்ச்சனா கூறுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் வேல் பிரதர்ஸ் குரூப்பில் உள்ள அர்ச்சனா , ஜித்தன் ரமேஷ்,ரியோ மற்றும் சோம் ஆகியோர் இணைந்து நிஷா குறித்து பேசுகின்றனர்.

அப்போது நிஷாவிடம் நகைச்சுவை நல்லா இல்லை என்று சொல்லாதீர்கள் என்றும், நகைச்சுவை நல்லா இருந்தா கேளுங்க , இல்லையெனில் அங்கிருந்து எழும்பி போய் விடுங்கள்.அதை விட்டுட்டு நல்லா இல்லைன்னு சொல்லாதீங்க , ஏனெனில் நாம் அவ்வாறு கூறுவது அவரது அடுத்த ஐந்தாறு வருட கேரியரை பாதிக்கும் என்று அர்ச்சனா கூறுகிறார்.

அதே போன்று ஜித்தன் ரமேஷ் நிஷாவிடம் ஒருமுறை,இருமுறை கூறலாம் மூன்றாவது முறை அவராகவே புரிந்து நடந்து கொள்ள வேணாமா,எப்போது தான் அவருக்கு தெரிய வரும் என்று நிஷா குறித்து கூறுகிறார்.இந்த உரையாடலில் சோம் மற்றும் ரியோ ஆகியோர் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர் .இதோ அந்த வீடியோ

வீட்டுக்கு போகனுமா?ஷோவில் வின் பண்ணணுமா? அர்ச்சனாவிடம் தரமான கேள்விகளை எழுப்பும் ஆஜீத்.!

archana

கால் சென்டரில் வேலை செய்யும் அர்ச்சனாவிடம் வீட்டுக்கு போக வேண்டுமா?ஷோவில் வின் பண்ண வேண்டுமா? என்ற கேள்வியை ஆஜீத் எழுப்பியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரமும் கால் சென்டர் டாஸ்க் நடந்து. வருகிறது.போட்டியாளரில் ஒருவரான ஆஜீத் எதிலும் ஈடுபடாமல் இருப்பதாக பலர் குற்றச்சாட்டுகள் எழுப்பினாலும் ,கருத்துகளை வைக்க வேண்டிய இடத்தில் சரியாக சொல்வார்.கடந்த வாரம் கூட ரியோ பல கேள்விகளை ஆஜீத்திடம் கேட்க ,அனைத்திற்கும் சரியான பதில்களை கூறியிருந்தார்.அதற்கு பலரிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றார்.

இந்த நிலையில் தற்போது கால் சென்டரில் ஊழியராக உள்ள அர்ச்சனாவிடம் ஆஜீத் பல கேள்விகளை முன் வைக்கிறார் .அவர் இந்த கேம் ஷோவில் நீங்கள் வரும்போது ஒரு வலிமையான போட்டியாளர் என்று அனைவரும் நினைத்தோம். கமல் சார் அவர்களிடம் கூட நான் இன்னும் என்னுடைய நக்கல்களை காட்டவில்லை என்று கூறினீர்கள். நீங்கள் வரும்போது உங்களிடம் நிறைய நக்கல்கள் தெரிந்தது. ஆனால் போகப் போக அது குறைந்துவிட்டது போன்று எனக்கு தோன்றுவதாக கூறினார்.

மேலும் அடிக்கடி நீங்கள் வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் டாஸ்க் எல்லாம் நான் பார்த்தவரைக்கும் நீங்கள் வேற லெவலில் செய்து வருகிறீர்கள். நான் பார்த்த வரைக்கும் எல்லாமே சூப்பராக செய்து இருக்கிறீர்கள்.இப்போது என்னுடைய சந்தேகம் ஒன்றே ஒன்றுதான், நீங்கள் உண்மையிலேயே வீட்டுக்கு போக வேண்டுமா? அல்லது இந்த ஷோவை வின் பண்ண வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.இதற்கு அர்ச்சனா எந்த மாதிரியான பதிலை கூறுவார் என்று நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.