வெள்ளரிக்காய் கோஸ்மரி பற்றி அறிவீரா

கோடைகாலத்தில் மிக சிறந்த உணவு பொருளாக வெள்ளரிக்காய் விளங்குகிறது. மேலும் வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர் சத்து காணப்படுவதால் இது கோடை காலத்திற்கு ஏற்ற மிக சிறந்த உணவாக பயன்படுகிறது.

  • வெள்ளரிக்காய் கோஸ்மரி எப்படி செய்யலாம்?

வெள்ளரிக்காயில் நாம்  கோஸ்மரி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம்.

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 1

பாசிப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

கறிவேப்பில்லை – சிறிதளவு

தேங்காய் திருவல் –  1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

செய்முறை:

 

வெள்ளரிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். அதற்கு பிறகு பாசிப் பருப்பை நீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து வைக்கவும். பின்னர் அதில் பாசிப்பருப்பை போட்டு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

அதற்கு பிறகு  வெட்டி வைத்த வெள்ளரிக்காய் துண்டுகளை  போட்டு தண்ணீர், உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெள்ளரிக்காய் மற்றும் பருப்பு நன்கு வெந்ததும் தேங்காய் துருவல், கறிவேப்பில்லை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

Leave a Comment