அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும்! – மு.க.ஸ்டாலின்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மருத்துவ மாணவர்களுக்கான, மருத்துவ கலந்தாய்வு சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில், மருத்துவ தரவரிசை பட்டியலில், 951 பேர் இடம்பெற்றுள்ளனர். முதல் 3 நாட்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டன.

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கி உள்ளது. இதனையடுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகையில், தனியார் மருத்துவ கல்லூரிகளில், இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை, திமுக ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.