காற்றில் பறக்கவிடும் வாக்குறுதிகளை கொடுப்பது திமுக – முதல்வர் பழனிசாமி

சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை பேரூரில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த பின் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழ் நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 16 லிருந்து 15 ஆக குறைந்துள்ளது என கூறியுள்ளார். பேரு காலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதம் பொறுத்த வரையில் 2030ல் அடைய வேண்டிய இலக்கை இப்போதே அடைந்துவிட்டோம். அந்த அளவுக்கு சுகாதாரத்துறை வெற்றிகரமாக, சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் பெருமிதம் கொண்டார்.

இந்தியாவிலேயே அதிகமாக மருத்துவமனையில் பிரசவம் பெறுவதும் தமிழ்நாட்டில் தான் என்றும் அதுபோல் ஏழை, எளியோருக்கு இலவச சிகிச்சை வழங்கக்கூடிய வகையில் 2000 அம்மா மினி க்ளினிக் ஒரே நேரத்தில் திறக்கப்பட்ட அரசு அதிமுக அரசு தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வின் மூலமாக அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் அதிக அளவிலே தேர்ச்சி பெற முடியாத சூழலில், அதிமுக அரசு 7.5 % உள் ஒதுக்கீடை கொண்டுவந்து 435 பேர் மருத்துவ படிப்பை படிக்கச் வாய்ப்பை உருவாக்கியுள்ளோம்.

தொடந்து பேசிய முதல்வர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த திட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக, நமக்கு சாதி, மதம் பேதமில்லை. காற்றில் பறக்கவிடும் வாக்குறுதிகளை கொடுப்பது திமுக என்றும் முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்