திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழக முன்னேற்றத்திற்கான கூட்டணி அல்ல -அமித்ஷா

திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழக முன்னேற்றத்திற்கான கூட்டணி அல்ல என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா  தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் கைத்தறி நெசவாளர்களிடையே பாஜக தேசிய தலைவர் அமித்ஷா  பேசினார்.அப்போது அவர் பேசுகையில், ஜவுளித்துறையில் 5 ஆண்டுகளில் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்ய அரசு முயன்று வருகிறது. விசைத்தறியை மேம்படுத்த தமிழகத்திற்கு மட்டும் ரூ 161 கோடி நிதியை, மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்ற கூட்டணி அமையும்.திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழக முன்னேற்றத்திற்கான கூட்டணி அல்ல.

2019-ல் மீண்டும் மோடி ஆட்சி அமையும் .காங்கிரஸ்  கூட்டணியில் இருக்கும்போது தமிழக மக்களுக்கு திமுக என்ன செய்தது? என்றும்  என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா  தெரிவித்துள்ளார்.

Leave a Comment