#BREAKING: மேயர், துணை மேயர் பதவிக்கு வேட்பாளர்களை அறிவித்த திமுக..!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். மேயர், துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்களை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், திமுக மேயர்,  துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

  • அதன்படி, சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பிரியா ராஜனும், துணை மேயர் பதவிக்கு மகேஷ் குமார் போட்டியிடுவார் என திமுக அறிவித்துள்ளது.
  • ஆவடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ஜி.உதயகுமார் போட்டி, துணை மேயர் பதவி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தாம்பரம் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக வசந்தகுமாரி கமலக்கண்ணன் போட்டி, துணை மேயர் பதவிக்கு ஜி.காமராஜ் போட்டியிடுகிறார்.
  • திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு பி.எம்.சரவணன் , துணை மேயர் பதவிக்கு கே.ஆர்.ராஜு போட்டியிடுகிறார்.
  • தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக அமைச்சர் கீதாஜீவன் சகோதரர் என்.பி.ஜெகன் போட்டி; துணை மேயர் பதவிக்கு ஜெனிட்டா செல்வராஜ் போட்டியிடுகிறார்.
  • சேலம் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ஏ.ராமச்சந்திரன் போட்டி; துணை மேயர் பதவிக்கு தினேஷ்குமார் போட்டியிடுகிறார்.
  • வேலூர் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக சுஜாதா அனந்தகுமார் போட்டி; துணை மேயர் பதவிக்கு சுனில் போட்டியிடுகிறார்.
  • தஞ்சை மாநகராட்சி மேயர் வேட்பாளராக சண்.ராமநாதன் போட்டி; துணை மேயர் பதவிக்கு அஞ்சுகம் பூபதி போட்டியிடுகிறார்.
  • நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிக்கு மகேஷ் வேட்பாளராக அறிவிப்பு; துணை மேயர் பதவிக்கு மேரி பிரின்சி போட்டியிடுகிறார்.

author avatar
murugan