• தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 • தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Image result for திமுக

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர்  திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம்  வெளியானது.இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

 1.  மத்திய சென்னை – தயாநிதி மாறன்
 2. வடசென்னை – டாக்டர் கலாநிதி வீராசாமி (ஆற்காடு வீராசாமியின் மகன்)
 3.  தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
 4.  ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
 5.  காஞ்சிபுரம் (தனி) –  செல்வம்
 6.  அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
 7.   வேலூர் – கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்)
 8.  தருமபுரி –  செந்தில் குமார்
 9.  திருவண்ணாமலை – சி.என். அண்ணாதுரை
 10.  கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி (பொன்முடியின் மகன்)
 11.  நீலகிரி (தனி)- ஆ.ராசா
 12.  பொள்ளாச்சி – சண்முகசுந்தரம்
 13.  திண்டுக்கல் – வேலுச்சாமி
 14.  கடலூர் – கதிரவன் (எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மகன்)
 15.  மயிலாடுதுறை – ராமலிங்கம்
 16.   தஞ்சாவூர் – எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
 17.  சேலம் – பார்த்திபன்
 18.  தூத்துக்குடி – கனிமொழி
 19.  தென்காசி (தனி) – தனுஷ்குமார் 
 20.  திருநெல்வேலி-ஞான திரவியம்  ஆகியோர் போட்டியிடுகின்றனர்.