மாவட்ட வாரியாக 8,000 ரேபிட் கிட் கருவி வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசு

தமிழ்நாட்டில் இதுவரை மாவட்ட வாரியாக 8 ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸை விரைந்து மேற்கொள்ள இந்தியா, சீனாவிடம் இருந்து 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை ஆர்டர் செய்து, அதில் முதற்கட்டமாக 3 லட்சம் ரேபிட் கிட்கள் நேற்று முன்தினம் இந்தியாவிற்கு வந்திருந்தது. இதையடுத்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து கொடுத்தது. அதன்படி, தமிழகத்திற்கு 12,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்று வந்தடைந்தன.

இதனிடையே தமிழக அரசு சீனாவில் நேரடியாக ஆர்டர் செய்திருந்த 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் நேற்று வந்தன. இதனால் தற்போது தமிழகத்தில் மொத்தம் 36,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் இருக்கின்றது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை மாவட்ட வாரியாக 8 ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த ரேபிட் டெஸ்ட் கருவியை கொண்டு சேலத்தில் முதல் முறையாக பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 18 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உடனடியாக முடிவு வந்துள்ளது என்று அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்