கொரோனா தொற்று பாதிப்பால் பிரபல கால்பந்தாட்ட வீரர் உயிரிழப்பு.!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 76 வயதான முன்னாள் கால்பந்தாட்ட வீரர் நார்மன் ஹன்டர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது. இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 76 வயதான முன்னாள் கால்பந்தாட்ட வீரர் நார்மன் ஹன்டர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 1966-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் விளையாடி இருந்தார். அப்போது இங்கிலாந்து அணி உலக்கோப்பை போட்டியில் வெற்றி வாகை சூடியிருந்தது.
 இங்கிலாந்து அணிக்காக 28 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மேலும், லீட்ஸ் யுனைடெட் கிளப் அணிக்காகவும் 14 ஆண்டுகள் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.