அதிர்ச்சியில் தினகரன் கூடாரம்!சுயேட்சை வேட்பாளருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

திருச்சி தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கணேஷ் என்பவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Related image

ஆனால் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் தினகரன் கட்சி பதிவு செய்யப்படாத கட்சி,இதனால் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது திட்டவட்டமாக தெரிவித்தது.இதன் பின்னர் நடைபெற்ற  விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குக்கர் சினத்தை ஒதுக்கி உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்தனர்.இந்நிலையில் எங்கள் தரப்பிற்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் உச்சநீதிமன்றம்  தேனும் ஒரு சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

பின் தேர்தல் ஆணையம் அளிக்கும்  சின்னங்களில் இருந்து ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னங்களில் ஒன்றான பரிசுப் பெட்டி சின்னத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்வு செய்தது. இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது.

Image result for பரிசு பெட்டி

ஆனால் தினகரன் கட்சி பலகட்டமாக குக்கர் சின்னத்தை கேட்டு போராடி வந்தது.பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் தினகரன் கட்சிக்கு  பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்து இருந்தனர்.

அதேபோல்  தலைமை தேர்தல் அதிகாரியிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் குக்கர் சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்களுக்கு அளிக்க கூடாது என்று மனு அளிக்கப்பட்டது.பின்னர் குக்கர் சின்னம் சுயேட்சை வேட்பாளர்களுக்கு வழக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது திருச்சி தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கணேஷ் என்பவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment