தோனியை சறுக்கிய வெளிநாட்டு போட்டிகள் : கோலிக்கு கை கொடுப்பார்களா பந்துவீச்சாளர்கள்

இந்தாண்டு தொடக்கம் முதல் இன்னும் பதினெட்டு மாதங்களுக்கு இந்திய கிரிகெட் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. அடுத்த 18 மாதங்களுக்கு வெளிநாடுகளில்  விளையாட உள்ளது. அனைத்தும் பந்துவீச்சுக்கு சவாலான ஆடுகளங்கள் அதில் கோலி தலைமயிலான அணி எவ்வாறு சவாலை வெல்ல போகிறது என பொறுத்து இருந்து பார்போம்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்று பயணத்தில் தொடங்கும் இந்த சவால், அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என ஸ்விங் மற்றும் அதிக வேகங்களுக்கு உரித்தான ஆடுகளங்களில் அடுத்த 18 மாதங்களுக்கு இந்திய அணிக்கு காத்திருக்கிறது.
இதேபோல் கடந்த வெளிநாட்டு சுற்று பயணத்தில் மஹிந்திரசிங் தோனி தலைமை வகித்தார். இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா என வெளிநாட்டு போட்டிகளில் 13 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது. இந்த தொடர்களில் விதிவிலக்காக லார்ட்ஸ், டர்பன் டெஸ்ட் போட்டியில் மட்டும் பந்து வீச்சாளர்கள் உதவியுடன் வெற்றியடைந்தது.
வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் போது தோனி கேப்டன்சியில் தேர்ச்சி பெறாமல் போனதற்கு, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்து எந்தவித உதவியும் கிடைக்கப் பொறாமல் போனது தான் முக்கிய காரணிகளில் ஒன்று. அதே நிலைமை விராட் கோலிக்கும் வராமல் இருந்தால் நமக்கு வெற்றி நிச்சயம். வெற்றி பெறுவது நமது பந்து வீச்சாளர்களின் கையில் தான் உள்ளது.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment