உலகக்கோப்பையில் கேப்டனுக்கு உதவியாக இருந்தார் தோனி -எம்.எஸ்.கே. பிரசாத்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவார் என கூறப்பட்டு வந்தது.ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு தோனி ஓய்வை அறிவிக்கவில்லை.இதனால் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பலர் ஓய்வை அறிவிக்க வேண்டும் எனவும் , பலர்  ஓய்வை அறிவிக்க கூடாது எனவும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் தோனி இரண்டு மாதத்திற்கு இராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி விளையாடும் தொடரில் இருந்து தன்னை விடுவிக்கும் படி கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து தோனி பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு நேற்று முதல் காஷ்மீரில் உள்ள விக்டர் படையுடன் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இந்திய அணி தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறுகையில் , தோனி சிறந்த கீப்பர் மற்றும் சிறந்த ஃபினிஷர் என கூறினார். மேலும்  கூறுகையில் குறுகிய ஓவரிகளில் எப்போதும் மிக சிறப்பாக விளையாடுவார்.

உலகக்கோப்பையில் சிறந்த கீப்பராகவும் ,பேட்ஸ்மேனாகவும் இந்திய அணிக்கு பலமாக இருந்தார்.தனது அனுபவத்தால் கேப்டனுக்கு உதவியாக இருந்தார்.தனக்கு இணையாக விக்கெட் கீப்பர்களையும் , பேட்ஸ்மேன்களையும் உருவாக்கி வருகிறார்  என கூறினார்.

 

 

author avatar
murugan