இந்தியா சிமெண்ட்ஸ் 75வது ஆண்டுவிழா.! அமித்ஷா, தோனி, ஓபிஎஸ், பங்கேற்பு.!

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் அமைச்சர் அமித்ஷா, தோனி, ஆளுநர் ரவி, ஓபிஎஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது பவளவிழா ஆண்டை முன்னிட்டு இன்று சென்னையில் கலைவாணர் அரங்கில் பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த விழாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், தமிழக ஆளுநர் ரவி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment