மெகா ஹிட் பட இயக்குனரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக தனுஷ்!

ராட்சசன் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ராம் குமார், அடுத்ததாக நடிகர் தனுஷை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் தற்போது வடசென்னை படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து மாரி 2, என்னை  நோக்கி பாயும் தோட்டா என படங்கள் வெளிவர உள்ளன. இயக்குனராகவும் ஒரு படத்தை எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இப்படம் ஃபான்டஸி காமெடி படமாக எடுக்க உள்ளனராம். இப்படத்தில் தனுஷ் புதிய கெட்டப்பில் நடிக்க உள்ளாராம்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment