தனுஷின் அடுத்த இரண்டு படங்களை தயாரிக்க போகும் விஸ்வாசம் தயாரிப்பு நிறுவனம்!! இயக்குனர்கள் யார்?! யார்??!

வடசென்னை, மாரி படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த இரண்டு படங்களையும் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

அதில் ஒரு படத்தை கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்க உள்ளனர். அடுத்த இரண்டாவது படத்தை ‘முண்டாசுபட்டி’ ‘ராட்சசன்’ படங்களை இயக்கிய ராம்குமார் இயக்க உள்ளார்.

இந்த இரு படங்களின் மற்ற நடிகர், நடிகை, டெக்னீசியன் மற்றும் சூட்டிங் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment