தமிழகத்தில் 4 ஆயிரத்தை தாண்டிய டெங்கு பாதிப்பு.! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

தமிழகத்தில் இதுவரை நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,266 ஆக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே, 572 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோடைகாலம் முடிந்து, மழை காலம் ஆரம்பித்த உடன் கொசுக்களின் மீதான பயமும், அதன் மூலம் வரும் உடல்நலக்குறைவு, காய்ச்சல் என்றும் பயம் அதிகரித்து விடுகிறது. குறிப்பாக டெங்கு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

வெகு நாட்கள் கிடப்பில் இருக்கும் தேவையற்ற பொருட்களில் தேங்கும் மழைநீரில் உருவாகும் ஏடிஸ்-எஜிப்டி கொசு வகையினால் இந்த டெங்கு காய்ச்சல் மக்களுக்கு பரவுகிறது. இதனை தடுக்க மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,266 ஆக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே, 572 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment