ரூ.5,000 தொகுப்பூதியத்தில் LKG, UKG-க்கு ஆசிரியர்கள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என அறிவிப்பு.

அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment