டெல்லியில் குறைந்து வருகிறது கொரோனா பாதிப்பு – சுகாதார அமைச்சர்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டெல்லியில் சற்று குறைந்த பாதிப்பு.

இந்திய தலைநகரமான டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வந்தது,  இந்நிலையில் அங்கு கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முழு ஊரடங்கை அமல்படுத்தினார், இதன் விளைவாக கடந்த சில நாட்களாக டெல்லியில் தொற்று எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது. டெல்லியில் தினமும் சுமார் 80,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

மேலும் இதைப்பற்றி டெல்லி சுகாதார அமைச்சர் சத்யெந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமை அன்று கூறுகையில் தேசிய தலைநகரில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36% லிருந்து 19.1% ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு நாளைக்கு 28,000 பேர் பாதிப்பு அடைந்த நிலையில் அது தற்போது 12,500 வரை குறைந்துள்ளது, தொற்று பாதிப்பு விகிதத்தை 5% க்கும் குறைவாகவும், 3000-4000 வழக்குகளுக்குக் கீழே வரும் வரை நாம் நிம்மதியாக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.இந்த தொற்று குறைய  ஊரடங்கில் மக்கள் வெளியே வரமால் இருந்தது குறிப்பிடத்தக்கது.