டெல்லி தேர்தல்: 107 இடங்களை கைப்பற்றியது ஆம் ஆத்மி! பாஜகவுக்கு பின்னடைவு!

டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றுவது கிட்டத்தட்ட உறுதி.

டெல்லி உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 107 இடங்களை கைப்பற்றிய நிலையில், பாஜக தொடர்ந்து பின்தங்கியுள்ளது. அதாவது, டெல்லி மாநகராட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதில், ஆம் ஆத்மி கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்று, 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதுபோன்று, பாஜக 85 வார்டுகளில் வெற்றி பெற்று, 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 5-ல் வெற்றி, 5-ல் முன்னிலை, சுயேச்சை வேட்பாளர்கள் 1-ல் வெற்றி பெற்று 3-ல் முன்னிலை பெற்றுள்ளனர்.

டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், கிட்டத்தட்ட டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்த நிலையில், இந்தமுறை ஆம் ஆத்மி வசம் வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment