5 சம்மன்களை புறக்கணித்தது ஏன்.? கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சரமாரி கேள்வி.! 

டெல்லியில் அமல்படுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையினால் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இதுவரை முன்னாள் டெல்லி அமைச்சர்கள் சக்தியேந்திர ஜெய்யின் மற்றும் மனிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரகண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்.! 

அதேபோல், இந்த சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் விசாரணைக்காக டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகின்றனர். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது வரையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை.

இதனை அடுத்து டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று அமலாக்கத்துறை சார்பில் வாதிடுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் மக்கள் பிரதிநிதியாக இருக்கிறார். மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர். அரசு நிறுவனத்தின் உத்தரவை புறக்கணிக்க முடியாது. எனவே, இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று விசரணையில் டெல்லி நீதிபதி அமர்வு, பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை இதுவரை அனுப்பிய ஐந்து சம்மன்களுக்கு ஏன் அரவிந்த் கெஜிரிவால் விளக்கம் அளிக்கவில்லை என்பதை டெல்லி நீதிமன்றத்தில் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் கூறுகையில்,  நீதிமன்ற உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அமலாக்கத்துறை சம்மன் என்பது சட்ட விரோதமானது. இதனை நாங்கள் நீதிமன்றத்தில் வலியுறுத்துவோம் என்று குறிப்பிடபட்டுள்ளது.

முன்னதாக அமலாக்கதுறையினர் சார்பில், நவம்பர் மாதம் 2 டிசம்பர் மாதம் 21, ஜனவரி மாதம் 19, 31 மற்றும் பிப்ரவரி மாதம் 2 ஆகிய ஐந்து சம்மன்கள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment