அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 4வது முறையாக சம்மன்.!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறையினர் 4வது முறையாக விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லியில் புதியதாக அமல்படுத்தப்பட்டு பின்னர் திரும்ப பெற்றுக்கொண்ட மதுபான கொள்கை மூலம் கோடி கணக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் முன்னதாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

4 வயது சிறுவன் மரணம் : ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அதற்கும் மறுத்துவிட்டார்.! டிரைவர் வாக்குமூலம்.!

தற்போது வரையில் அவர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்காக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதே வழக்கில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு அமலாக்கத்துறையினர் தொடர்ந்து அழைத்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்காக முன்னதாக கடந்த  2023 ஏப்ரல் மாதம் மத்திய புலனாய்வுப் பிரிவால் கெஜ்ரிவால் விசாரணை செய்யப்பட்டார்.

அதன் பிறகு, அமலாக்கத்துறையினர், நவம்பர் 2 மற்றும் டிசம்பர் 21ஆம் தேதியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராவதை தவிர்த்து வந்தார். அதனை அடுத்து மீண்டும் 3வது முறையாக ஜனவரி 3ஆம் தேதி ஆஜராக கோரினர்.

ஆனால், விசாரணை என்று அழைத்து கைது செய்வதே அவர்களின் நோக்கம் என தொடர்ந்து கூறி 3வது முறையும் அமலாக்கத்துறையினரிடம் ஆஜராவதை அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்துவிட்டார். இதனை தொடர்ந்து தற்போது 4வது முறையாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் ஜனவரி 18ஆம் தேதி விசாரணைக்கு டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.