டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் : மதியம் 1 மணி நிலவரம் என்ன ?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 19.37% வாக்குகள் பதிவாகியுள்ளது .

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல்   நடைபெற்று வருகிறது.ஆம் ஆத்மி, பாஜக ,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகிறது.டெல்லியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,46,92,136 ஆகும். தேர்தலுக்காக 13,750 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில்  மதியம் 1 மணி நிலவரப்படி 19.37% வாக்குகள் பதிவாகியுள்ளது .