“விடுதலைப் புலிகளை தோற்கடித்து, அதன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது” – இலங்கை அதிபர்

இங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை தொடர வேண்டும் என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது என்று இங்கிலாந்து நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்புகளும் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் கருத்துக்களை பரப்பிக்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, இலங்கை அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்து, அதன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், விடுதலைப்புலிகள் இயக்கம், உலகம் முழுவதும் செயல்பட்டு வருவதாகவும், எந்த நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் அவர்கள் அச்சுறுத்தலாக இருப்பதால், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை பிரிட்டன் அரசு தொடரும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.