அதள பாதாளத்தில் இலங்கை பொருளாதரம்.. கரணம் இவங்க தான்… உச்சநீதிமன்றம் பரபரப்பு.!

Basil Rajapaksa - Mahinda Rajapaksa - Gotabaya Rajapaksa 

2020, 2021 கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான நாடுகள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டன. சில பெரும் நாடுகளின் பொருளாதாரங்கள் கூட சற்று அதிர்வை கண்டது. இந்த பொருளாதார ரீதியிலான சிக்கலில் சிக்கி அடுத்தடுத்து மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை மாறியது. பணவீக்கம் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் தேவைகள் அதிகரித்து , அதன் இறக்குமதி குறைந்து விலைவாசி உச்சம் தொட்டது. இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த சமயம் மக்கள் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் … Read more

#BREAKING: மகிந்த ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேற தடை!

மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்.  மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன்படி, மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச இருவரும் வரும் 28-ஆம் தேதி வரை இலங்கையை விட்டு வெளியே செல்லக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரு ராஜபக்சக்களும் நாட்டை விட்டு தப்ப வாய்ப்புள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#Breaking:மகிந்த ராஜபக்சேவை கடற்படை தளத்துக்கு அழைத்து சென்றது ஏன்? – பாதுகாப்பு செயலாளர் முக்கிய தகவல்!

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே அரசைக் கண்டித்து கடும் போராட்டம் நிலவி வரும் நிலையில்,நேற்று முன்தினம் தனது பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.பின்னர்,அவரது மாளிகையில் தங்கியிருந்தபோது, அரசுக்கு எதிரானவர்கள் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டனர். மேலும்,அவரது மாளிகையின் உள்ளே நுழைய முயற்சியும் செய்த ஆர்பாட்டக்காரர்களால் நுழைய முடியவில்லை.இதனால்,அங்கிருந்து நேற்று அதிகாலை ராஜபக்சே வெளியேறி,தற்போது திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் பாதுகாப்புக்கு மத்தியில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. … Read more

#JustNow: இலங்கை வன்முறை – ஐ.நா. கண்டனம்!

இலங்கையில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம். இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிச்செல் பச்லெட் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொண்டு வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் அமைதியை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த போராட்டத்தில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் வன்முறைக்கு ஐ.நா. மனித … Read more

#BREAKING: இலங்கையில் வன்முறை.. வெளிநாடு தப்பியோட ராஜபக்சே குடும்பம் திட்டம்!

ராஜபக்சே குடும்பத்தினர் நாட்டைவிட்டு வெளியேற கூடாது என்று பொதுமக்கள் முழக்கம். இலங்கையில் பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ளதால் அங்கு மக்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறைக்கு மத்தியில் வெளிநாடு தப்பியோட ராஜபக்சே குடும்பம் திட்டமிட்டு இருப்பதால், பொதுமக்கள் கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேற கூடாது என மக்கள் முழக்கமிட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று தனது … Read more

#Breaking:பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறினார் மஹிந்த ராஜபக்சே!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் காரணமாக, அந்நாட்டு அரசு பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த சூழலில்,இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார்.இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையிலும், அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, பல இடங்களில் வன்முறை வெடித்து, கலவரமாக உருவெடுத்துள்ளது. இதனால் அடுத்தடுத்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.இந்த நிலையில், … Read more

#BREAKING: பரபரப்பு.. இலங்கையில் துப்பாக்கி சூடு – 3 பேர் காயம்

இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் காயம். இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்திருந்தார். … Read more

#BREAKING: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா!

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியதாக தகவல். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் காரணமாக, அந்நாட்டு அரசு பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. ராஜபக்சே ராஜினாமா செய்யக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், அவரை பதவி விலக அதிபர் … Read more

#SriLankaCrisis:இன்று கூடும் நாடாளுமன்றம் – பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?..!

கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளதால் உள்ளதால்,உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வானளவு உயர்ந்து உள்ளது.இதனால்,ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ வழியில்லாமல் திணறி வருகின்றனர்.மேலும், இலங்கை தமிழர்களில் சிலர் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அதே சமயம்,பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோர்தான் காரணம் என்று கூறி அவரை பதவி விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,இலங்கையில் … Read more

#BREAKING: இலங்கையில் ராஜபக்சவுக்கு பதில் புதிய பிரதமரை நியமிக்க ஒப்புதல்?

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக புதிதாக நியமிக்கப்பட உள்ள பிரதமரின் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்க ஒப்புதல் என தகவல். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்தா ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு மாதம் காலமாக மக்கள் போராட்டங்கள் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இலங்கையில் ராஜபக்சவுக்கு பதில் புதிய பிரதமரை நியமிக்கவும், இலங்கையில் புதிய பிரதமர் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கவும் … Read more