முதலமைச்சர் குறித்து அவதூறு ஆடியோ – நடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க உத்தரவு!

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில், நடிகை மீரா மிதுனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மீரா மிதுனை கைது செய்து விசாரிக்கவும், அவரது பதிவுகளை நீக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. ஆடியோ பதிவிட்டு சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதுதொடர்பாக மீரா மிதுன் முன் ஜாமீன் வழங்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு தொடுத்திருந்தார். இதில் ஆடியோ பதிவிட்டதாக கூறும் நாளில் வேறொரு நிகழ்வில் கலந்துகொண்டு இருந்தேன். என் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இந்த நிலையில், இவரது மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க ஆணையிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்