மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மொபைல் டார்ச்சை வைத்து சிகிச்சையளித்த மருத்துவர்…! ஒருவர் உயிரிழப்பு..!

ராஜஸ்தானில் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மொபைல் டார்ச்சை வைத்து சிகிச்சையளித்த மருத்துவர். ஒருவர் உயிரிழப்பு. 

ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள  புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அப்போது வயதான பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தனர். அவர் ஆபத்தான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின் அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியது.

இதனையடுத்து மருத்துவர்கள் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.  அப்பெண் உயிரிழந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் உயிரிழந்ததாக பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும்  மின்சாரம் துண்டிப்பு காரணமாக பல நோயாளிகளின் நிலை மோசமடைந்து பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.