தமிழகத்திற்குள் போலி மதுபானங்கள் நுழைவதை தடுக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்க முடிவு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்திற்குள் போலி மதுபானங்கள் நுழைவதை தடுக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால், அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவானது மே மாதம் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகளுடன், சில கடைகள்  திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மே-7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் கூறுகையில், அண்டை மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திற்குள் போலி மதுபானங்கள் நுழைவதற்கு தடுக்கவே, டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.