#IPL2022: பவர்பிளே ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்த பஞ்சாப்.. டெல்லி அணிக்கு 116 ரன்கள் இலக்கு!

இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 32-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகிறது. இந்த போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இதில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் களமிறங்கினார்கள்.

தொடக்கத்திலே அதிரடி வீரர் தவான் 9 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, பின்னர் மயங்க் அகர்வால் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதனைதொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோவ் 9 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழக்க, பின்னர் லிவிங்ஸ்டன் 2 ரன்களில் வெளியேறினார். பவர் பிளே ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து டெல்லி அணி திணறிய நிலையில், அதனை மீட்க ஜிதேஷ் சர்மா களமிறங்கி சிறப்பான ஆடினார்.

32 ரன்கள் எடுத்து அவரும் வெளியேற, பின்னர் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் தங்களின் விக்கெட்டை இழந்தார்கள். இறுதியாக பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் எடுத்தது. 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தற்பொழுது டெல்லி அணி களமிறங்கியுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ், கலீல் அகமத் , லலித் யாதவ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள்.