சச்சின்,தோனியை தொடர்ந்து தாதா கங்குலியின் வாழ்க்கை பயோபிக்..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை வரலாறு  திரைப்படமாகவுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலியின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஒரு திரைப்படம் உருவாக்கவுள்ளது. இந்த அறிவிப்பை கங்குலி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில், கிரிக்கெட்டே என் வாழ்க்கை. அது எனக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும் நான் என் தலையை உயர்த்தி முன்னோக்கி செல்ல முடியும். நினைவில் கொள்ளக்கூடிய ஒரு பயணம். லவ் பிலிம்ஸ் எனது பயணத்தில் ஒரு வாழ்க்கை வரலாற்றை உருவாக்கி அதை திரைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கங்குலியின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. கிரிக்கெட்டில் வாழ்க்கை வரலாறு படம் எடுக்கப்படுவது இது முதல் முறை அல்ல. கங்குலிக்கு முன், முகமது அசாருதீன், மகேந்திர சிங் தோனி மற்றும் சச்சின் ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றியும் படம் எடுக்கப்பட்டுள்ளது. கங்குலி இந்தியாவுக்காக 113 போட்டிகளில் விளையாடி 7212 ரன்கள் எடுத்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்கள் மற்றும் 35 அரை சதங்களை அடித்தார்.

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்காக 10,000 ரன்களை எட்டிய பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர். அவர் 311 ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன்கள் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில், அவர் 22 சதங்கள் மற்றும் 72 அரை சதங்களை அடித்துள்ளார். கங்குலி இந்தியாவின் சிறந்த தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவர். சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து, இந்தியாவுக்கு மறக்கமுடியாத பல தொடக்கங்களைக் கொடுத்தார்.கங்குலி கேப்டனான பிறகு இந்தியா வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படும் அணியாக மாற்றினார். அவரது தலைமையின் கீழ், இந்தியா 1983 க்குப் பிறகு முதல் முறையாக 2003 இல் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நுழைந்தது. அவரது தலைமையின் கீழ் இந்தியா சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்றது.

2002-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி வான்கடே மைதானத்தில் இந்திய அணியை வீழ்த்தியபோது இங்கிலாந்து வீரர் பிலின்டாப் தனது சட்டையை கழற்றி மைதானத்தில் வலம் வந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதே ஆண்டு லார்ட்ஸ்ல் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு கங்குலி தனது சட்டையை கழற்றி பால்கனியில் இருந்து வெற்றியைக் கொண்டாடினார். இந்த நிகழ்வை ரசிகர்களால் இன்றுவரை மறக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan