தமிழன் இருக்கும் வரை முதல்வர் ஸ்டாலினின் பெயர் நிலைத்து இருக்கும் – அமைச்சர் துரைமுருகன்

மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் மணல் எடுக்க அனுமதி தேவையில்லை என பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மணல் எடுத்துக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், செம்மொழியில் தமிழை தவிர வேறு எந்த மொழி உயிரோடு இருக்கிறது? நமது ஊரின் பெருமை நமக்கு தெரியவில்லை. பானை ஓடுகளும், அதில் உள்ள எழுத்துக்களும் நம்மளை காப்பாற்றுகிறது. இன்றைக்கு இருப்போம், நாளைக்கு ஆட்சி போகும். ஆனால், தமிழர் பண்பாட்டு அடையாளங்களை உலகெங்கிலும் பரப்பும் முதல்வர் ஸ்டாலினின் பெயர் தமிழன் இருக்கும் வரையில் நிலைத்து நிற்கும் என தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், கீழடி தொல்லியல் ஆய்வு மற்றும் தமிழின் சிறப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொல்லியல் அகழாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த, நெல்லையில் ரூ.15 கோடியில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்