, , , ,

பெண்களை ஆபாசமாக பேசிய பிரபல யூ-டியூபர்; விசாரணைக்கு ஆஜராக – சைபர் கிரைம் போலீசார் உத்தரவு…!

By

  • யூ-டியூபில் ஆபாச பேச்சுக்களால் பெண்களை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் பிரபல யூ-டியூபர் மதனை விசாரணைக்கு ஆஜராக சைபர்கிரைம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

யூ-டியூபர் மதன்,பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார்.பின்னர்,இந்த வீடியோக்களானது,வீடியோ கேம் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதன்மூலம் மதன் பிரபலமானார்.

   
   

இந்நிலையில்,யூ-டியூபர் மதன் ஆன்லைன் கேம் விளையாட்டின்போது பெண்களை ஆபாசமாகப் பேசியதாகவும் அவர் நடத்தி வரும் டாக்சிக் மதன் 18+ எனும் யூ-டியூப் சேனலில்,சில பெண்களை ஆபாசமாகப் திட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,பள்ளி சிறுமிகளிடமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலியல் ரீதியாக தவறாக பேசியதாகவும்,மேலும்,சில பள்ளி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டதாகவும் புகார்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில்,யூ-டியூபர் மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதனால்,புகார் தொடர்பாக மதனை நாளை காலை சைபர் கிரைம் துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கூறி சைபர் கிரைம் போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த விசாரணையை தொடர்ந்து,மதனின் யூடியூப் சேனல்கள் முடக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinasuvadu Media @2023