CWC19 : ஆஸ்திரேலிய அணிக்கு 208 ரன்கள் இலக்கு

உலக கோப்பை தொடரில் நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் மோதிவருகின்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்தது.
இதன் பின்னர் ஆப்கான் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது.அந்த அணியில் நஜிபுல்லா,ரஹமத் மட்டும் ஓரளவு தாக்கு பிடித்து ஆடினார்கள்.இறுதியாக ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கான் அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.ஆப்கான் அணி இறுதியாக 207 ரன்கள் அடித்தது.ஆப்கான் அணியில் அதிகபட்சமாக நஜிபுல்லா 51,ரஹமத் 43 ரன்கள் அடித்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் கம்மின்ஸ்,சம்பா தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இதன் பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.