Shocking:வாடிக்கையாளர்களே…வட்டி விகிதம் அதிகரிப்பு- HDFC அறிவிப்பு!

நாட்டின் முன்னணி வீட்டுக் கடன் போன்றவை வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லிமிடெட் தனது வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ஆம்,HDFC லிமிடெட் வாடிக்கையாளர்களின் EMI அதிகரிக்கப் போகிறது.ஏனெனில்,வீட்டுக் கடன் வழங்குநரான ஹெச்டிஎஃப்சி லிமிடெட் அதன் பெஞ்ச்மார்க் கடன்(benchmark lending rate) விகிதத்தை 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், எச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்திடம் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர தவணை (EMI) அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில்,HDFC நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துகிறது.”HDFC ஆனது மே 1, 2022 முதல் வீட்டுக் கடன்களுக்கான ரீடெய்ல் ப்ரைம் லெண்டிங் ரேட்டை (RPLR) 0.05 சதவிகிதம் உயர்த்தியுள்ளது” என்று நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், புதிய வாடிக்கையாளர்களுக்கு வட்டி உயர்வு இருக்காது எனவும், அவர்களுக்கான வட்டி விகிதம் கடனின் அளவு மற்றும் காலத்தைப் பொறுத்து 6.70 முதல் 7.15 சதவீதம் வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.இந்த உயர்வு மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

HDFC இன் கடன் விகிதங்களில் இந்த அதிகரிப்பு மற்ற வங்கிகள் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஏற்ப உள்ளது.அதன்படி,முன்னதாக,ஏப்ரல் மாதத்தில்,நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் பரோடா போன்ற வங்கிகள் பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடதக்கது.