ஊரடங்கு தளர்வுகள்: ஆந்திரா, டெல்லி உட்பட ஐந்து மாநிலங்களின் தளர்வுகள் குறித்து அறியலாம்!

நாடு முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தினசரி கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் தற்போது குறைந்து கொண்டே தான் வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தாலும், 2.82% தினசரி தொற்று பாதிப்பு குறைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளது பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லி, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களில் எங்கெங்கு, எப்படி தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆந்திரா

ஆந்திராவில் கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ளதையடுத்து ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆந்திராவில் உள்ள எட்டு மாவட்டங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா தாக்கம் அதிகம் உள்ள உபயா, கோதாவரி கிருஷ்ணா, சித்து மற்றும் பிரகாசம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி

தலைநகர் டெல்லியில் தற்பொழுது கொரோனா பாதிப்பு மிக அதிகளவில் குறைந்து வருகிறது. சனிக்கிழமை டெல்லியில் 85 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனராம். இது இந்த ஆண்டில் டெல்லியில் ஏற்பட்ட மிக குறைந்த தினசரி பதிவு எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் இன்று முதல் 50 பேருடன் திருமண நிகழ்வுகள் நடத்தவும், ஹோட்டல்களை திறக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜிம் மற்றும் யோகா மையங்கள் 50 சதவீதம் பேருடன் திறக்கலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளை தவிர்த்து யாரும் வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக வார இறுதி நாட்களாகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 7 மணிமுதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், இருப்பினும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க வார இறுதிநாட்களில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஹரியானா

கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு ஹரியானாவில் ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது ஹரியானா மாநிலத்தில் பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் ஆய்வகங்கள் நடைமுறை வகுப்புகள் நடத்துவதற்காக திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கு மேலாக உள்ள நிலையில் தற்போது டெல்டா வகை கொரோனா பரவலும் ஆங்காங்கே பரவி வருகிறது. இருப்பினும் தமிழக அரசு சில ஊரடங்கு தளர்வுகளை கொடுத்துள்ளது. அதன்படி வருகிற ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைவாக உள்ள சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் மால்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஜவுளிக்கடைகள் ஆகியவை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், திரையரங்குகள் மற்றும் உணவகங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதால் சில தளர்வுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று உள்ள 23 மாவட்டங்களில் முன்பு இருந்ததை விட மேலும் சில கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மும்பை

மும்பையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், டெல்டா ப்ளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு அங்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே மும்பையில் ஊரடங்கு தளர்வுகள் அதிகமாக கொடுக்கப்படவில்லை. மேலும், அங்கு மூன்றாம் அலை எழுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதால் வார நாட்களில் மட்டும் அத்தியாவசிய கடைகள் மற்றும் துணிக்கடைகள் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal