CSKvSRH: பாண்டே,வார்னர் சிறப்பான ஆட்டம்! ஐதராபாத் அணி 175 ரன்கள் குவிப்பு

இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள்   175 ரன்கள் அடித்துள்ளது.

இன்று  41-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் -சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதி வருகின்றது.இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில்  டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

பின்னர் களமிறங்கிய  சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில்  3 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் மட்டுமே அடித்தது.சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக பாண்டே 83*,வார்னர் 57 ரன்கள் அடித்தனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சில்  ஹர்பஜன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

Leave a Comment