CSKvRCB : கோலி, மேக்ஸ்வெல், ருதுராஜை திணறடிக்கும் பந்துவீச்சாளர்கள்…

CSKvRCB : கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மோத உள்ளனர். இந்த ஆட்டம் இன்று இரவு எட்டு மணி அளவில் தொடங்க உள்ளது. முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் இந்த போட்டியில் மிகவும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

கடந்த முறை நடப்புச் சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் ஆட்டத்தை துவங்கும் முனைப்புடனும், இந்த முறையெனும் கண்டிப்பாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடனும் இரு அணிகளும் மோத உள்ளன.

Read More – ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்கள்! முதலிடத்தில் யார் தெரியுமா?

இந்த இரு அணிகளிலும் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு எதிரணி வந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்றனர். அவர்களின் ஒரு சிலரை மட்டும் தற்போது இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

விராட் கோலி :

சர்வதேச பந்துவீச்சார்களையே அடித்து துவம்சம் செய்து விடும் கிங் கோலி ஒரு சில பவுலர்களிடம் தடுமாறுவார். அந்த ஒரு சில பவுலர்களில் சென்னை அணி பந்துவீச்சாளர் தீபக் சாகரும் ஒருவர். தீபக் சாகர் பந்துவீச்சில் இதுவரை பெரிய அளவில் விராட் கோலி விளையாடியது இல்லை என்பது அவரது ஆட்டத்தை பார்த்தாலே தெரியும்.

மேக்ஸ்வெல் :

சர்வதேச கிரிக்கெட் அணிகளையே டி 20 கிரிக்கெட்டில் மிரள வைத்தவர் மேக்ஸ்வல். இவர் எப்படி ஆடுவார் இவருக்கு எப்படி பந்து போட வேண்டும் என தெரிவதற்குள்ளே எனது அதிரடி ஆட்டத்தால் எதிரணியை கலங்கடித்து விடுவார். இருந்தும், இவர் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜே பந்து வீச்சில் இதுவரை ஏழு முறை ஆட்டம் இழந்துள்ளார். ஜடேஜாவின் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் தடுமாறியதே அதிகமாக உள்ளது.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் :

முதன்முறையாக சென்னை எனும் மிகப்பெரிய அணியை வழிநடத்தி செல்ல இருக்கும் கேப்டன் ருதுராஜ், மிகப்பெரிய பொறுப்புகளுடன் இன்று ஆட்டத்தில் களமிறங்க உள்ளார். நிதானமான தொடக்கத்தை அளித்து பின்னர் அதிரடி காட்டும் ரருதுராஜ்,  பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பந்துவீச்சில் சற்று தடுமாறி இருக்கிறார். அதனால் இன்றைய விளையாட்டில் சற்று நிதானமாக சிராஜ் பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.