ஒரு பூனைக்காக 20 நாள்களாக ரயில்வே நிலையத்தில் கட்டிய துணியுடன் காத்திருக்கும் தம்பதி !

ரேணி குண்டா ரயில் நிலையத்தில் காணாமல் போன பூனையை கடந்த 20 நாள்களாக தேடி வரும் குஜராத் தம்பதி.குஜராத்தில் உள்ள சூரத் நகரை சார்ந்த ஜியாஸ் பாய் , மீனா தம்பதி இவர்கள் கடந்த 17 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

சூரத்தில்ஜியாஸ் பாய் துணி வியாபாரம் செய்து வருகிறார்.இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த ஒரு ஆண்டுகளாக ஒரு பூனையை தங்களது குழந்தை போல வளர்ந்து வந்து உள்ளனர்.அந்த பூனைக்கு பாபு என பெயரும் வைத்து உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 09-ம் தேதி திருப்பதியில் உள்ள சுவாமி ஏழுமலையான் கோவிலுக்கு தங்கள் பூனையுடன் இந்த தம்பதி வந்து  உள்ளனர்.பின்னர் சுவாமி தரிசனம் செய்து விட்டு 13-ம் தேதி ரேணி குண்டா ரயில் நிலையத்திற்க்கு வந்து உள்ளனர்.அப்போது தங்கள் மகனாக வளர்ந்து வந்த பூனை காணாமல் போனதும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

இந்த தம்பதி பல இடங்களில் பூனையை  தேடியும் கிடைக்கவில்லை.இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிலர் பூனையை கண்டுபிடித்து தருவதாக கூறி ரூ.50, 000 வரை மோசடி செய்து உள்ளனர். இருந்தாலும் தங்கள் மகனாக வளர்ந்த பூனை (பாபு ) கிடைக்கவில்லை என கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.

ரயில்வே போலீஸ் பூனையை கண்டுபிடித்து தருவதாக கூறியும் ரயில்வே நிலையத்தில் பூனை கிடைக்கும் வரை போகமாட்டோம் என கூறி கட்டிய துணியுடன் காத்திருக்கின்றனர்.

author avatar
murugan