சென்னையில் கொரோனா வார்டில் பணிபுரிந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர் பலி!

சென்னையில் கொரோனா வார்டில் பணிபுரிந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர் பலி.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னையில், பட்டினப்பாக்கத்தை  சேர்ந்தவர் வினோத் என்பவர், பேரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இதய அறுவை சிகிச்சை மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். 

பின் கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வந்த இவருக்கு, சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் பிரச்னை இருந்துள்ளது. கடந்த 30ம் தேதி இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று மூச்சு திணறல் அதிகமாக காணப்பட்ட நிலையில், நேற்று முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இவரது உடலை, சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவகிருஷ்ணனிடம் தனியார் மருத்துவமனை நிர்வாகம், டாக்டர் வினோத் பெற்றோர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

இவரது உடல், பட்டினப்பாக்கத்தில் உள்ள பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும், 33 வயதான மருத்துவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.