சீனாவை தொடர்ந்து … மும்பை வந்த 2 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ..?

  • சீனாவில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
  • இன்று சீனாவில் இருந்து  வந்த பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது.

சீனாவில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த  வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

இந்த வைரஸ் வூஹான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் இருந்த ஒரு விலங்குகளிடம் இருந்துதான் தோன்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த கொரனா வைரஸ் காய்ச்சல்  தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளிலும் பரவி உள்ளது.

இதைத்தொடர்ந்து வூஹான் நகரில் இந்தியாவில் இருந்து மருத்துவம் மற்றும் பிறபடிப்புகளை படிக்கும் 700 மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியா சார்பில் கூறப்பட்டது. இந்தியாவில் “கொரனா வைரஸ்” பரவாமல் இருக்க அனைத்து சர்வதேச நிலையத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம்  மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இன்று பரிசோதனை செய்ததில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும்  மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தனி வார்டு அமைத்து  மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில்  “கொரனா வைரஸ்” தாக்கி 25 பேர் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.