கொரோனா பீதி மருத்துவர்களை வீட்டை காலி செய்ய கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள்.!காலிய செய்ய சொன்னால் காலி செய்யுங்கள்-காவலுக்கு அமித்ஷா அதிரடி

உலகளவில் மட்டுமல்லாமல் இந்தியாவில் அதி வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அதி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.இந்நிலையில் தொற்றின் காரணமாக பரவி வரும் கொடூரக் கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் செவிலியர்கள், காவல்துறையினர், சுகாதாரத்துறையின் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

இந்தநிலையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் வாடகை வீட்டில் குடியிருக்கும் கொரோனா மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பிற மருத்துவ ஊழியர்களை கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக வீட்டின் உரிமையாளர்கள் வீட்டைக் காலி செய்யச் சொல்லி கடுமையாக கட்டாயப்படுத்துகிறார்கள்.இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர்கள் பலரைக் கட்டாயப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். இந்நிலையில் பல மருத்துவர்கள் வீடுகளின்றி நடுரோட்டில் நிற்கின்றனர். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடித்தத்தில் கூறியிருந்தனர்.இதனையடுத்து, மருத்துவத்துறை ஊழியர்களை வீட்டைக் காலி செய்ய கட்டாயப்படும் வீட்டு உரிமையாளர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி மாநகர காவல் ஆணையாளருக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இது குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமித்ஷா இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதத்தினையும் அளித்துள்ளார்.

author avatar
kavitha