#CoronaUpdate:மக்களே கவனமாக இருங்க…ஒரே நாளில் 2,451 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 2,451 பேருக்கு கொரோனா பாதிப்பு;54 பேர் கொரோனாவுக்கு பலி.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,380 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,451 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,52,425 ஆக பதிவாகியுள்ளது.

குணமடைந்தவர்கள்;பலி எண்ணிக்கை:

அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1,589 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,16,068 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்,கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 56 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆக குறைந்துள்ளது.இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,22,116  ஆக பதிவாகியுள்ளது.

சிகிச்சையில் உள்ளவர்கள்-செலுத்தப்பட்ட தடுப்பூசி:

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 14,241 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாட்டில் இதுவரை 1,87,26,26,515 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 18,03,558 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.