கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்வு.!

சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவி வருவதால் மத்திய அரசு கொரோனாவை தேசிய பேரிடராக அறிவித்தது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஐ எட்டியுள்ளது. அதில் 32 பேர் வெளிநாட்டவர்கள் என்று தெரிவித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரு வெளிநாட்டவர் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனவால் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 பேரும் கேரளாவில் 2 வெளிநாட்டவர்கள் உட்பட 28 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அதில் எர்ணாகுளத்தில் 5, காசர்கோடு 6 மற்றும் பாலக்காட்டில் ஒருவர் என கேரள மாநிலத்தில் மொத்தம் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அறிவித்துள்ளார். மேலும் கேரளாவில் மொத்தம் 44,390 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 44,165 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறது என்றும் 225 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்