கொரோனா தடுப்பூசி: “அடுத்த வாரம் முதல் விநியோகிக்கப்படும்”- அதிபர் டிரம்ப்!

அமெரிக்காவில் கொரோனாக்கு எதிரான தடுப்பூசி விநியோகம், அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்குடன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க நிறுவனமான மாடர்னா, கொரோனாவுக்கு எதிராக தான் கண்டுபிடித்த தடுப்பு மருந்து, 95 சதவீத அளவுக்கு பலனளிப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணிகள் தொடங்கவிருப்பதாகவும், முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் என நன்றி தெரிவிக்கும் நாளில் உரையாற்றினார்.