சேலத்தில் சிதறி கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்! இரண்டு ஊழியர்கள் பணியிடைநீக்கம்!

சேலம் கொத்தாம்பாடியில் சாலையில் விழுந்து கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகளை பார்த்து மக்கள் பீதி  அடைந்துள்ளனர். தலைவாசல் பகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட கொரோனா பரிசோதனை மாதிரிகள், சாலையில் தவறி விழுந்துள்ளது.

மருத்துவ பணியாளர்கள் இதனை கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்ட நிலையில், விசாரணை நடத்திய அதிகாரிகள், பணியாளர்கள் இருவரை பணிநீக்கம் செய்துள்ளனர். பணியில் அலட்சியமாக இருந்ததாக, தற்காலிக பணியாளர்கள் செந்தில் மற்றும் சரவணன் ஆகியோரை பணிநீக்கம் செய்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.