சத்தமாக பேசினாலும் கொரோனா பரவும்! விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவின் தேசிய அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் கொரோனா வைரஸ் குறித்து வெளியான புதிய தகவல். 

இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்காக, மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அமெரிக்காவின் தேசிய அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த  விஞ்ஞானிகள், மக்களை பேச வைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் அவர்களை, குறிப்பிட்ட சில வார்த்தைகளை மெதுவாகவும், பிறகு வேகமாகவும் உச்சரிக்க செய்தனர். பின், இந்த சோதனையில், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு நிமிடம் சத்தமாக பேசும்போது, கொரோனா வைரசை சுமந்த, கண்ணுக்கு புலப்படாத 1000க்கும் மேற்பட்ட உமிழ்நீர்த் திவலைகள் உருவாவதை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், இந்த ஆய்வின் போது, ஒரு சிலர் சத்தமாக பேசும்போது, மற்றவர்களை விட 10 மடங்கு அதிகமான வைரசை காற்றில் பரப்புவதும் கண்டுபிடிக்கப்படடுள்ளது. இவ்வாறு காற்றில் பரவும் உமிழ்நீர்த் திவலைகள், 8 நிமிடம் முதல் 14 நிமிடம் வரை மிதந்துகொண்டிருப்பதையும் இவர்கள் கண்டுபிடிப்பித்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா வைரஸை பரப்ப, இருமல், தும்மல் போலவே, சத்தமாக பேசுவதும் கூட, இந்த வைரசை பரப்பும்  என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.