ஷங்கரின் உதவி இயக்குநர் காலமானார்.! முதல் படம் வெளியாவதற்கு முன்னரே மரணம்.!

ஜி. வி. பிரகாஷ் குமாரை வைத்து 4ஜி என்ற படத்தை இயக்குகிறார்.  படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் சாலை விபத்தில் அருண் பிரசாத் உயிரிழந்துள்ளார். 

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான ஷங்கர் அவர்களின் உதவி இயக்குநராக ஐ படத்தில் பணியாற்றியவர் அருண் பிரசாத். குறும்படங்களை இயக்கி வந்த இவர் நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, அதன் பின்னர் ஷங்கரின் உதவியாளராக சேர்ந்தார்.

தற்போது இவர் ஜி. வி. பிரகாஷ் குமாரை வைத்து 4ஜி என்ற படத்தை இயக்குகிறார். இதில் காயத்ரி சுரேஷ், சதீஷ், கிஷோர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அருண் பிரசாத் விபத்தில் உயிரிழந்துள்ளார். 

கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது டிப்பர் லாரி ஒன்று மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக 4ஜி டீம் மிகு‌ந்த வருத்தத்தில் உள்ளார்களாம்.

இந்த நிலையில் ஜி. வி தனது டுவிட்டர் பக்கத்தில், எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குநர் வெங்கட் பாக்கர் ஆகிய அருண் பிரசாத் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.

அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல். நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும் என்று பதிவிட்டு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது முதல் படத்தை கூட பார்க்காமலே போய் விட்டாரே என்று பலர் கூறி தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.